Sunday, July 17, 2011

பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?


பேஸ்புக் இணையதளம் சமுக வலைத்தளங்களில் பிரபலமான இணையதளமாகும். இதில் நாள்தோறும் உலா வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். நமது வலைப்பூவின் பதிவுகளை பேஸ்புக்கில் இணைப்பதால் நமது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பெரிய கூட்டமே படிக்க வாய்ப்புள்ளது. நமது பதிவைப் படிக்கும் பலரும் தங்களது பேஸ்புக் இடத்தில் நமது
பதிவுகளின் இணைப்பை பகிருவதால் இணைய வரத்தும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பேஸ்புக் புதியதாக Facebook Like என்று ஒரு பட்டனை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரே கிளிக்கில் பதிவுகளை அவர்களது Facebook Profile இல் பகிர்ந்து கொள்ள முடியும்.

Facebook Like பட்டன்கள் மூன்று விதமான டிசைன்களில் வைத்துக்கொள்ள முடியும். கீழ்வரும் மூன்று அமைப்புகளில் உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளவும்.

1. Standard Facebook Like Button



<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=standard&amp;show_faces=false&amp;width=450&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=35&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:450px; height:35px;'/>
</b:if>


2. Box Like Button with Count


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=65&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:65px;'/>
</b:if>


3. Small Facebook Like button with Count


<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=21&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:100px; height:21px;'/>
</b:if>


Facebook Like பட்டனை இணைப்பதற்கான வழிமுறைகள்.

1. முதலில் பிளாக்கர் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.
2. Design -> Edit HTML செல்லவும்.
3. Expand Widget Templates என்பதனை டிக் செய்து கொள்ளவும்.
4. பின்னர் <data:post.body/> என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
5. உங்களுக்குப் பிடித்த டிசைனில் உள்ள பட்டனின் நிரல்வரிகளை காப்பி செய்யவும்.
6. பதிவுகளின் மேல்பகுதியில் பட்டன் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்குப் பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இடவும்.

மேலே உள்ள நிரல் வரிகள் பதிவுகள் முழுதாக தோன்றும் பக்கத்தில் மட்டுமே
காட்சியளிக்கும். முகப்புப் பக்கத்திலும் தோன்ற சிவப்பு வண்ணத்தில் தோன்றும் முதல் வரி மற்றும் கடைசி வரியை நீக்கி விடலாம்.

பதிவுகளின் மேல்பகுதியின் வலது ஒரத்தில் (Right top corner) தோன்ற கீழ்க்கண்டவாறு நிரல் வரிகளை சேர்த்துக்கொள்ளவும். எப்போதும் போல சேர்க்கும் இடத்தில் தெரிய <div> பகுதியை எடுத்து விடுங்கள்.


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div style="padding: 4px; float: right;">
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=65&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:65px;'/>
</div>
</b:if>


”colorscheme=light” என்பதற்கு பதிலாக “colorscheme=dark” என்று மாற்றிக் கொண்டால் அடர்த்தியான வண்ணத்தில் தோன்றும்.

Like என்ற வார்த்தைக்குப் பதிலாக Recommend போன்ற வார்த்தைகளை பயன்படுத்த விரும்பினால் ”action=Recommend” என்று மாற்றிக் கொள்ளவும்.
http://ponmalars.blogspot.com/2011/05/facebook-like.html